Recents in Beach

சிந்தனை கதைகள் [ படித்ததில் பிடித்தது]


கதை 1 : மரமும் சிறுவனும்


                            

    ஒரு சிறுவன் தினமும் வந்து அந்த மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு, " ஆடிப்பாடி ,விளையாடி விட்டு போவான்"..!! "அவனை பார்த்தாலே அந்த மரத்துக்கு ஆனந்தம் பொங்கும்"....!! திடீரென்று ஒரு நாள் அந்த சிறுவன் வரவில்லை..!! 

"மரமும் அவனை எதிர்பார்த்து காத்திருந்தது"...!! சில நாள் கழித்து அந்த சிறுவன் வந்தான்.!! அந்த மரம் சந்தோஷத்துடன் அவனை பார்த்து , "ஏன் இவ்வளவு நாள் வரவில்லை".? உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்டது....!! 

    என் நண்பர்கள் எல்லோரும் அழகழகாய் பொம்மைகள் வைத்திருக்கிறார்கள்,....!! ஆனால் ,  "என்னிடம் மட்டும் ஒன்றும் இல்லை" என்றான். 

கவலைப்படாதே ....!! 

இந்த மரத்தில் உள்ள பழங்களை எடுத்துச் சென்று, " கடையில் விற்று பொம்மை வாங்கிக்கொள்".....!! என்னை பார்க்க அடிக்கடி வந்து கொண்டிரு என்றது...!! அவனும் மகிழ்ச்சியுடன் பழங்களை பறித்து சென்றான்.....!!! 

மறுபடியும் அவன் வரவேயில்லை....!!

மரம் அவனுக்காக ஏங்கியது....!! பல வருடம் கழித்து ஒரு நாள் வந்தான்....!! அவன் முகத்தில் கவலை தெரிந்தது, இப்போது அவன் வளர்ந்திருந்தான்....!! அவனை பார்த்ததும் மரத்துக்கு ஏக சந்தோஷம். 

"வா என்னிடம் வந்து விளையாடு"...!! 

"இந்த கிளையில் ஏறி அமர்ந்து பாட்டு பாடு என்றது".....!!! அதற்கு அவன்_  இல்லை இப்பொது வயதாகி விட்டது_...!! எனக்கு மனைவி குழந்தைகள் உள்ளனர், ஆனால் ,  "நாங்கள் வசிக்க சொந்தமாக நல்ல வீடு இல்லை"....!! "வீடு வாங்க என்னிடம் பணமில்லை",.....! 

மரம் உடனே சொன்னது , 

பரவாயில்லை ....  "உனக்கு கொடுக்க என்னிடம் பணம் காசில்லை".....!! அதற்கு பதில், " என்னுடைய கிளைகளை வெட்டி எடுத்துச்செல் ". "அதில் ஒரு வீடு கட்டிக்கொள்" என்றது. அவனும் கோடாரியால் கிளைகளை வெட்டத் தொடங்கினான்.....!! 

    "இப்படி ஒரேயடியாக என்னை பார்க்காமல் இருக்காதே" .......!! 

முடிந்த வரை,  " வருடம் ஒரு முறையாவது வந்து பார்த்து செல்" என்றது.....!! வேண்டிய கிளைகளை வெட்டி எடுத்துச் சென்றான்.....!! அதற்கு பின் பல வருடங்கள் வரவில்லை....!! அவன் வருவான்.... வருவான்.... என்று மரமும் நித்தமும் காத்திருந்தது..... !! 

பல வருடங்கள் கழித்து பார்க்க வந்தான்.....!! 

மரம் அவனை பார்த்து,   " ஆனந்த கூத்தாடியது"......!!! அவன் எப்போதும் போல் ,    'சோகமாக இருந்தான்'.....!! "ஏன் இப்படி இருக்கிறாய்",        என்று மரம் கேட்டது.....!! 

"என் மீன் பிடி படகு உளுத்து விட்டது"...., 

"படகு இல்லாத்தால் மீன் பிடிக்க முடியவில்லை"......, !! 

"அதனால் வருமானம் இல்லை" "நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம்" என்றான்.....!! மரம் துடித்து போனது,.....!! 

" நான் இருக்கிறேன்".....!! 

  "என்னுடைய அடி மரத்தை வெட்டி எடுத்துக் கொள்"......!! 

"இதை வைத்து நீ பெரிய படகு கட்டிக்கொள்" என்றது.....!!! 

அவன் அடி மரத்தை வெட்டும் போது...., மறக்காதே....!! 

வருடத்திற்கு ஒரு முறை என்றில்லாமல் ......, "எப்போதாவது என்னை பார்க்க வா".. என்றது. ஆனால் அவன் வரவேயில்லை.....!! 

மரத்துக்கு நம்பிக்கை மெல்ல மெல்ல மறைய ஆரம்பித்தது.....!!! 

அப்போது அவன் வந்தான்.....!!! 'தலையெல்லாம் நரைத்து' ,

'கூன் விழுந்து' ,'மிகவும் வயதான தோற்றத்துடன்'... ,அவன் இருந்தான்.....!! 

"அவனை பார்த்து மரத்துக்கு அழுகையே வந்து விட்டது"........!!! 

"இப்போது உனக்கு கொடுக்க என்னிடம் பழங்கள் இல்லை".......!!! 

"கிளைகள் இல்லை"........!!! 

"அடி மரமும் இல்லை".........!! 

உனக்கு கொடுக்க,"என்னிடம் ஒன்றுமே இல்லையே என வருந்தியது".........!!! அவன் சொன்னான் , 

நீ..... 'பழங்கள் கொடுத்தாலும்' , 

அதை கடிக்க எனக்கு பற்கள் இல்லை,......!! வீடு கட்டவும் ,

படகு செய்யவும் என்னிடம் சக்தி இல்லை....!! "எனக்கு இப்போது ஓய்வு மட்டுமே தேவைப்படுகிறது" என்றான்.....!!! 

அப்படியா....!!! 

இதோ....,   " தரையில் கிடக்கும் என் வேர்களில் படுத்துக் கொள்" என்றது....!! "அவனும் அந்த வேர்களில் தலை வைத்து படுத்துக் கொண்டான்"......!! 

இந்த சுகத்துக்கு தான்...... 

"அந்த மரம் பல வருடங்கள் ஏங்கி தவித்தது"..........!! 

"இப்போது அந்த ஏக்கம் நிறைவேறியது",.....!! 

"அந்த மரம் ஆனந்த கண்ணீர் விட்டது".......!! 

"இது மரத்தின் கதையல்ல"....!! 

" நம் பெற்றோர்களின் கதை"....!! 

இந்த சிறுவனை போல் , "நாமும் சிறு வயதில் தாய் தந்தையோடு விளையாடுகின்றோம்"...!! வளர்ந்து பெரியவனானதும்..., தமக்கென்று குடும்பம்,குழந்தை என்று ஒதுங்கி விடுகின்றோம். அதன் பின் , "ஏதாவது தேவை அல்லது பிரச்சனை என்றால் தான் அவர்களை தேடி போகின்றோம்"........!! "நம்மிடம் இருப்பவை எல்லாம்", 

  " அவர்கள் கொடுத்தது என்பதை புரிந்து கொள்ளுங்கள்"...... !! 

  "நம்மால் அவர்களுக்கு எதுவும் கொடுக்க முடியாது"......!! 

   "நம்முடைய பாசம், அன்பு, அனுசரணையான வார்த்தைகளை தவிர".........!!! "அவர்கள் விரும்புவதும் அதைதான்"..........!!!


கதை 2 : நல்லதே நினை

 கருத்தரங்கு  ஒன்றில் பேச எழுந்த பிரபல பேச்சாளர் ஒருவர், தங்க மோதிரம் ஒன்றைத் தூக்கி பிடித்து, 

சபையோருக்குக் காட்டினார். 


    இது சுத்தமான 22 காரட் தங்கத்தினாலான மோதிரம். இதனை பெற்றுக்கொள்ள விரும்புபவர் யார்? என அங்கு குழுமியிருந்தவர்களிடம் கேட்டார். சபையில் கைகள் ஒவ்வொன்றாய் உயரத் தொடங்கின. 

    பின்னர் அவர் மெழுகுவர்த்தி யொன்றை எரியச் செய்து, குறடு ஒன்றின் உதவியுடன் அந்த மோதிரத்தை மெழுகுவர்த்திச் சுவாலையில் பிடித்தார். சிறிது நேரத்தில் புகைக்கரி பட்டு அம்மோதிரம் முற்றிலும் கறுப்பாக மாறியது. 

    இப்போது இதனைப் பெற்றுக் கொள்ள யார் விரும்புகிறீர்கள்?" எனப் பேச்சாளர் கேட்டார். சபையிலிருந்த அனைவருமே கை உயர்த்தினர். நல்லது. நான் செய்வதைக் கொஞ்சம் கவனியுங்கள்" என்று கூறிய பேச்சாளர், 

  தனது கையிலிருந்த மோதிரத்தை கீழே போட்டுப் பாதணியினால் மிதித்து நன்றாக தரையில் அழுத்தித் தேய்த்தார். பின்னர் அதனை உயர்த்தி பிடித்து, இப்போது இதனைப் பெற விரும்புபவர் யாரும் உண்டா? எனக் கேட்டார். அப்போதும் சபையில் இருந்த அனைவருமே கைகளை உயர்த்தினர். 

    சரி, இப்போது நான் செய்வதைப் பாருங்கள்!" எனக் கூறிய அவர், அந்த மோதிரத்தைக் கீழே போட்டு ஒரு சுத்தியலால் அடித்து உருக்குலையச் செய்தார். தகர்ந்து உருக்குலைந்து போன அந்த மோதிரத்தைத் தூக்கிப் பிடித்த அவர்,    இனிமேலும் யாராவது இதனை பெற்றுக் கொள்ள விரும்புகிறீர்களா?" என்று கேட்டார். அப்போதும்  கைகள் உயர்ந்தன. பின்னர் அவர் பேசத் தொடங்கினார்:

நண்பர்களே! பாருங்கள்

நான் இந்த மோதிரத்தை என்ன செய்த போதிலும், நீங்கள் அதனைப் பெற்றுக்கொள்ளவே விரும்புகிறீர்கள். ஏனெனில் நான் கொடுத்த வதைகளினால் இந்த மோதிரத்தின் அருமை  பெருமையில் எவ்விதக் குறைவும் ஏற்படவில்லை. 

    இதே போன்றுதான், உங்கள் வாழ்க்கையிலும்    உங்கள் மீதும் கரி பூசப்படலாம்; நீங்கள் கீழே போட்டு மிதிக்கப்படலாம் அல்லது அடித்து நொறுக்கப்படலாம். இந்த மாதிரியான நிலைமைகளில் நீங்கள் உங்களைப் பற்றித் தாழ்வாக மதிப்பிட்டுவிடக் கூடாது. ஏனெனில்,  உங்கள் பெருமை ஒருபோதும் குறையாது. 

 நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் உயர்ந்தவரே. நேற்றைய ஏமாற்றங்கள், நாளைய கனவுகளை  நசுக்கிவிட  இடம் கொடுக்காதீர்கள். நல்லதே நினைப்போம்; சொல்லுவோம்; செய்வோம்; நல்லதே நடக்கும். இதில் அணுவளவும் ஐயம் கொள்ள வேண்டாம்.

கதை 3 : கண்ணாடி சொல்லும் மூன்று பாடங்கள்...



    நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டு விட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது. அந்தக் கறையைக் கண்ணாடி, கூட்டுவதும் இல்லை, குறைப்பதும் இல்லை. உள்ளது உள்ளபடி காட்டுகிறது அல்லவா? அதே போல் உன் சகோதரனிடம்- நண்பனிடம்- கணவரிடம்/ மனைவியிடம் எந்த அளவுக்கு குறை இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டும். எதையும் மிகையாகவோ, ஜோடித்தோ சொல்லக் கூடாது. துரும்பைத் தூண் ஆக்கவோ, கடுகை மலையாக்கவோ கூடாது. இது கண்ணாடி சொல்லும் முதல் பாடம்!”

    கண்ணாடிக்கு முன்னால் நீ நிற்கும்போதுதான் உன் குறையைக் காட்டுகிறது. நீ அகன்று விட்டால் கண்ணாடி மௌனமாகிவிடும். அதே போல் மற்றவரின் குறைகளை அவரிடம் நேரடியாகவே சுட்டிக்காட்ட வேண்டும். அவர் இல்லாத போது முதுகுக்குப் பின்னால் பேசக்கூடாது. இது கண்ணாடி தரும் இரண்டாவது பாடம்!”

    ஒருவருடைய முகக் கறையைக் கண்ணாடி காட்டியதால் அவர் அந்தக்கண்ணாடி மீது கோபமோ, எரிச்சலோ படுகிறாரா? இல்லையே…! அதே போல் நம்மிடம் உள்ள குறைகளை யாரேனும் சுட்டிக் காட்டினால் அவர் மீது கோபமோ, எரிச்சலோ படாமல் நன்றி கூற வேண்டும். அந்தக் குறைகள் நம்மிடம் இருக்குமேயானால் திருத்திக்கொள்ள வேண்டும். இது கண்ணாடி தரும் மூன்றாவது பாடம்!”

    இனி கண்ணாடி முன்னால் நின்று முகத்தை அலங்கரிக்கும் போதெல்லாம் இந்த அறிவுரைகள் உங்கள் மனதை அலங்கரிக்கட்டும்..

கதை 4 : மற்றவர்களின் பாராட்டுக்காக மட்டுமே வேலை செய்யாதே



    ஒரு பணக்காரர் தன் வீட்டில் கடவுள் சிலை வைக்க, ஒரு சிற்பியை அணுகி சென்றார். அவர் சென்ற நேரம் அந்த சிற்பி ஒரு பெண் கடவுள் சிலையை செதுக்கிக் கொண்டிருந்தார்.

கொஞ்ச நேரம் அவர் செதுக்குவதை வேடிக்கை பார்த்த அவர், சிற்பி செதுக்கிய இன்னொரு சிலை அதே மாதிரி இருப்பதை கவனித்தார்.

உடனே பணக்காரர், ”ஒரே கோவிலில் எப்படி ஒரே மாதிரி சிலைகள் வைப்பார்கள்? இல்லை... இந்த இரண்டு சிலைகளும் வெவ்வேறு கோவிலுக்காக செதுக்குகிறீர்களா?” என்று சிற்பியிடம் கேட்டார்

சிற்பி சிரித்துக்கொண்டே, “இல்லை ஐயா. கீழே கிடக்கும் சிலையானது உடைந்து போனது...” என்றார்.

பணக்காரர் ஆச்சரியத்துடன், ”என்ன சொல்றீங்க... மிகவும் அழகாக தானே இருக்கிறது அந்த சிலை. எந்த பாகமும் உடையக்கூட இல்லையே!” எனக் கேட்டார்

    “அந்த சிலையின் மூக்கில் சின்ன கீறல் இருக்கிறது... பாருங்கள்” என்றார் சிற்பி.

    “ஆமாம்!.அது சரி.... இந்த சிலையை எங்கே வைக்கப் போகிறீர்கள்?” என்று கேட்டார் பணக்காரர்.

    “இது கோவில் கோபுரத்தில், நாற்பது அடி உயரத்தில் வரும் சிலை!” உளியை உயர்த்திக் காட்டி சொன்னார் சிற்பி.

    பணக்காரர் வியப்புடன், ”நாற்பது அடி உயரத்தில் இந்த சின்ன கீறலை யார் கண்டுபிடிக்கப் போகிறார்கள்? இதற்காக ஏன் இன்னொரு சிலை செய்கிறாய்... முட்டாள்!” என்றார்.

    “அந்த சிலையில் கீறல் இருப்பது, எனக்கு தெரியுமே! எப்போது அந்த கோவில் வழி சென்றாலும், எனக்கு என் தொழிலில் உள்ள குறை உறுத்துமே.... அதனால் தான் இன்னொரு சிலை செய்கிறேன்” என்றார் சிற்பி.

நீதிஅடுத்தவர் பாராட்டுக்காக வேலை செய்யாதே. உன் மனத்திருப்திகாக வேலை செய்!

கதை 5 : போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து






அருமையான கதை.

  ஒருவர் ஒரு வங்கியில் பணம் எடுத்துக்கொண்டு, பணப்பெட்டியை பின்னால் மாட்டிக்கொண்டு டூவீலரில் வேகமாகச் செல்லுகிறார். வண்டியின் அதிர்வில் அந்தப் பெட்டி லேசாகத் திறந்துகொண்டு, 100 பத்துரூபாய்நோட்டுகள் கொண்ட ஒரு கட்டு கீழே விழுந்துவிடுகிறது. அது தெரியாமல் அந்த நபர் வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றுவிடுகின்றார். 

(அந்த நபர் இக்கதையில் இனி வரமாட்டார்)

    கீழே விழுந்த வேகத்தில் 100 பத்துரூபாய்நோட்டுகள் கொண்ட அந்த கட்டிலிருந்து ஒரே ஒரு பத்துரூபாய்நோட்டு மட்டும் விடுபட்டு காற்றில் பறந்து சிறிது தூரத்தில் கிடக்கிறது.

அந்த ஒற்றை பத்துரூபாய்நோட்டு இருந்த வழியில் ஒருவன் வருகிறான்.

    இந்த நோட்டைக் கண்டு, ',இன்று நரி முகத்தில் விழித்திருக்கிறேன் போல' என நினைத்து, மிகவும் சந்தோஷமடைகிறான். அந்த நோட்டை எடுத்துக்கொண்டு ஹோட்டலுக்குப் போனான். இரண்டு இட்லி - ஒரு காப்பி (அன்றய விலைவாசியில்) சாப்பிட்டான், அருகிலிருந்த பிள்ளையார் கோவில் உண்டியலில் மீதியிருந்த ஒரு ரூபாயைப் போட்டு, பிள்ளையாருக்கு நன்றி சொன்னான். சந்தோஷமாக வீடு திரும்பினான்.

    மீதி 99 பத்துரூபாய்நோட்டுகள் கொண்ட கட்டு அது விழுந்த இடத்திலேயே கிடந்தது. அந்த வழியாக ஒருவன் வந்தான். இந்த நோட்டுக்கட்டைப் பார்த்தான். எடுத்தான்.பரபரவென்று எண்ணினான். 99 நோட்டுகள்.மீண்டும், மீண்டும் பலமுறை எண்ணினான்.99 நோட்டுகள்தான்.    வங்கியில் 99 நோட்டுகள் கொண்ட கட்டு கொடுக்க  மாட்டார்களே. அந்த ஒற்றை பத்துரூபாய்நோட்டு இங்கே பக்கத்தில் எங்கேனும்தான் கிடக்க வேண்டுமென்று தேட ஆரம்பித்தான். அந்த ஒற்றை பத்துரூபாயைத்

தேடினான்.... தேடினான்.... தேடினான்....

இன்னும் தேடிக்கொண்டிருக்கிறான் --------

    என்று சொல்லி கலகலவென்று சிரித்தார் பூஜ்ய குருதேவ் அவர்கள்.

    பத்து ரூபாய் கிடைத்தவன் திருப்தியாக சாப்பிட்டுவிட்டு சந்தோஷமாக சென்றான். 990 ரூபாய் கிடைத்தவன் அதை அனுபவிக்காமல், இன்னம் ஒரு பத்து ரூபாய்க்காக அல்லாடிக்கொண்டிருக்கிறான்.

கருத்து : நம்மில் பலர் இப்படித்தான்கிடைத்தவைகளை அனுபவிக்கத் தெரியாமல் கிடைக்காதவைகளைத் தேடி அலைந்து உடலும்  மனமும் சோர்ந்து அல்லலுறுகிறோம்.

கதை 6 : யாரிடம் பாடம் கற்க வேண்டும் என்று நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.



x    

   ஒர் ஊர்ல ஒரு அறிவாளி இருந்தார். அவருக்கு கடவுள் பக்தி ரொம்ப அதிகம். ஒரு நாள், அவர் காட்டுக்குப் போகும் போது ஒரு நரியைப் பார்த்தார். அந்த நரிக்கு முன்னங்கால் ரெண்டுமே இல்லை. அப்போது அவர் மனசுல ஒரு சந்தேகம். 

    'இந்த நரிக்கு ரெண்டு காலும் இல்லை... அப்படி இருக்கறப்போ இது எப்படி வேட்டையாடி தன்னுடைய பசியைப் போக்கி கொள்ள முடியும்..?" அப்படின்னு யோசிக்க ஆரம்பிச்சார்.

    இப்படி யோசிச்சுக்கிட்டு இருக்கும் போதே அந்த பக்கமா ஒரு புலி வந்தது. ஒரு பெரிய மானை அடிச்சி இழுத்துகிட்டு வந்தது. அதை சாப்பிட ஆரம்பித்தது. சாப்பிட்டது போக மீதியை அங்கேயே விட்டுட்டு சென்றுவிட்டது.

    புலி போனதை அறிந்து, கால் இல்லாத அந்த நரி மெதுவாக நகர்ந்து வந்து மிச்சமிருந்ததை சாப்பிட்டது. திருப்தியாக அங்கிருந்து அகன்றது.

    இதை கவனித்த அந்த மனிதன், ரெண்டு காலும் இல்லாத ஒரு வயசான நரிக்கே ஆண்டவன் சாப்பாடு போடறான். அப்படி இருக்கறப்போ... தினமும் கோவிலுக்கு போய் சாமி கும்பிடற நமக்கு சாப்பாடு போடாம விட்ருவானா? நமக்கு கடவுள் பக்தி வேற அதிகம்.. என்று எண்ணினான். அதுக்கப்புறம் அவர் காட்டுக்கே போறதில்லை. ஒவ்வொரு நாளும் போய்கிட்டே இருக்கு..

சாப்பாடு வந்த பாடில்லே..! 

    ஒரு நாள் ராத்திரி நேரம்.. கோயில்ல யாருமே இல்லை. இவர் மெதுவா கண்ணை திறந்து கடவுளை பார்த்தார்.

    ஆண்டவா..! என்னுடைய பக்தியிலே உனக்கு நம்பிக்கை இல்லையா...? என்று புலம்பினார். இப்போ கடவுள் மெதுவா கண்ணை திறந்து சொன்னாராம்..

    'முட்டாளே..! நீ பாடம் கற்றுக் கொள்ள வேண்டியது நரிகிட்ட இல்லே..! புலிகிட்ட..! புலியைப் போல் உழைத்து சாப்பிட்டு, மீதியை இயலாதவர்களுக்கு தானமா கொடு" என்று சொன்னாராம்.

    நாம் யாரிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ள போகிறோம் என்று நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.

கதை 7 : பிறரின் வார்த்தைகளால் பலவீனப்பட வேண்டாம்! 

     குத்துச் சண்டை வீரர் ஒருவர் இருந்தார். அந்தப் பகுதியில் அவரை வெல்ல யாருமே இல்லை. சில குத்துக்களிலேயே எதிரியை வீழ்த்திவிடும் வலிமை அவருக்கு இருந்தது. தோல்வி என்பதையே அறியாமல் வாழ்ந்து வந்தார். பெரும்பாலும் அவருடன் போட்டியிடக்கூட யாருமே முன்வருவதில்லை.

      அவருடைய எதிரிகள் எவ்வளவோ விதங்களில் முயற்சி செய்தும் கூட அவரை வீழ்த்த முடியவில்லை!

 நல்ல உடற்பயிற்சி, சத்தான உணவு, தேவையான அளவு உறக்கம் என்று தன்னுடைய உடலை நன்றாகப் பேணி வந்ததால், எதிரிகள் அவரை வீழ்த்த வேறு ஏதாவது வகையில் திட்டம் வகுக்க ஒன்று கூடினார்கள்.

    பல விதமான ஆலோசனைகளை அவர்கள் கூடிப் பேசினார்கள். ஏதாவது செய்து அவரைக் கொன்றுவிட்டாலும் அவர் வீரர்களுக்கெல்லாம் முன்மாதிரி என்று பேசப்பட்டு அழியாத புகழைப் பெற்று விடுவார். 

    எனவே அந்த யோசனை கைவிடப்பட்டது. குடிப்பழக்கம் போன்ற கெட்ட பழக்கங்களை அவருக்கு அறிமுகப்படுத்தலாம் என்று முயற்சி செய்து அயல் நாட்டு போதை வஸ்துக்களை அவருக்குப் பரிசளிக்க முயன்ற போது அவர்களுக்கு முன்பாகவே அவர் அதை உடைத்து நொறுக்கி அவர்களை அவமானப்படுத்தி அனுப்பினார். உருப்படியாக எந்த ஒரு யோசனையும் கிடைக்காத நிலையில் அவர்களுக்குள் ஒரு முடிவெடுத்தார்கள். எதையாவது செய்து அவரைப் போட்டியில் வீழ்த்த வேண்டும்.

        எனவே அவரை வீழ்த்துபவருக்கு 10 லட்சம் பரிசு கொடுப்பதாக அறிவித்தார்கள். பெரிய தொகைதான், இருந்தாலும் அவரை வீழ்த்த இதைவிட அதிகமாக செலவு செய்யவும் அவர்கள் தயாராக இருந்தார்கள். இந்தச் செய்தி காட்டுத்தீ போலப் பரவியது.

     10 லட்சம் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டாலும் அந்த வீரரின் வலிமை தெரிந்திருந்ததால் போட்டிக்கு வர யாருமே முன்வரவில்லை. இது புதிதாய் சண்டைப் பயிற்சி செய்து வரும் ஒரு இளைஞனின் காதிலும் விழுந்தது. இந்த நிலையில் அந்த இளைஞன், தான் போட்டியிட முன்வந்தான். பலரும் அவனை பயமுறுத்தி அவரிடம் மோத வேண்டாம் என்று அறிவுரை கூறினார்கள். அவனோ தன் முடிவில் உறுதியாக இருந்தான். வீரரும் அவனுடன் சண்டையிட சம்மதித்து விட்டார். போட்டியின் நாள் அறிவிக்கப் பட்டது.

  இளைஞன் தன்னுடைய நெருக்கமான நண்பர்களை வரவழைத்தான். அவர்களிடம் தனக்காக உதவிச் செய்யும்படி சில விஷயங்களைக் கூறினான். அவன் எதற்காக அப்படிச் சொன்னான் என்று அவர்களுக்குப் புரியவில்லையென்றாலும் நண்பனின் வெற்றிக்காக எதையும் செய்யத் தயாராக இருந்ததால் அவன் சொன்னதை அப்படியே செய்ய சம்மதித்தார்கள்.

      அதில் ஒருவன், வீரரின் வீட்டுக்குப் பழங்களுடன் போய் அவர் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் சொன்னான். அவரும் சந்தோஷமாக அவற்றைப் பெற்றுக் கொண்டு நன்றி சொன்னார். வந்தவன் திடீரென்று, "என்னய்யா ஆச்சு உங்களுக்கு? பேசும் போதே இப்படி மூச்சு வாங்குதே. கல்லு மாதிரி இருந்தீங்களே! உடம்பைப் பாத்துக்குங்க" என்று சொல்லிக் கிளம்பினான்.

"எனக்கு மூச்சு வாங்குதா? நான் நல்லா தானே பேசுறேன்?" அவருக்குக் குழப்பம் வந்துவிட்டது.

    மறுநாள் அதிகாலை, அவர் வீதியில் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திட்டப்படி இன்னொரு இளைஞன் அவருக்கு எதிர்ப்பட்டு வணங்கினான்.

    "ஐயா, போட்டியில கலந்துக்கப் போறதா கேள்விப்பட்டேன். நான் உங்க தீவிர ரசிகன். இப்பவும் நீங்கதான் ஜெயிக்கப் போறிங்க. அதுல சந்தேகமே இல்லை. ஆனாலும் முன்னால உங்க ஓட்டத்துல இருந்த வேகமும், வலிமையும் இப்ப இல்லையே? உடம்பு சரியில்லையா?" என்று கேட்டுவிட்டு நகர்ந்தான்.

    'என்ன எல்லாரும் இப்படி கேக்குறாங்க?' இப்போது சிறிதாய் பயம் துளிர்விட்டது. போட்டி துவங்கும் நேரம் வந்தது. பலரும் வந்து அவருக்கு வாழ்த்து சொல்லி உற்சாகப்படுத்தினர்.

    அவர் மேடையேறப் போகும் போது எதிராளியான இளைஞனின் நண்பனான மற்றொரு இளைஞன் கையில் பூங்கொத்துடன் வந்து அவரை வாழ்த்திக் கைகுலுக்கினான்.

    "என்னய்யா, எப்பவும் உங்க பிடி இரும்பு மாதிரி இருக்கும் இப்ப ரொம்பவும் தளர்ந்து போச்சே, என்னாச்சு உங்களுக்கு?" என்று கேட்டுவிட்டு விடைபெற்றான். அவ்வளவுதான். வீரர் முற்றிலுமாக சோர்ந்து போனார்.

    போட்டி துவங்கியது. அவர் வேகமாய்த் தாக்குதலை ஆரம்பித்தாலும் இனம் புரியாத சோர்வு அவரை மேற்கொண்டது.

    இளைஞனின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பலவீனமாய் சரிந்தார். எல்லாரும் ஓடி வந்து இளைஞனின் சாதனையையும், வீரத்தையும் பாராட்டினார்கள். அவனோ நன்றிப் புன்னகையோடு தன் நண்பர்களின் முகத்தை பார்த்தான்.

    பலருடைய வாழ்வில் தாங்கள் பலகீனப்பட்டு விட்டோமோ என்கிற எண்ணமே அவர்களை வீழ்த்தி விடுகிறது. எனவே பிறரின் வார்த்தைகளால் பலவீனப்படாமல் நமது எண்ணங்களாலும் நம்பிக்கைகளாலும் பலப்படுவோம்!   

 கதை 8 : மாவீரன் நெப்போலியன் [வல்லவனையும் தட்டும் வழுக்குப்பாறை]

    மாவீரன் நெப்போலியன் கடைசியாக பிரிட்டனிடம் தோல்வி அடைந்தார். பிரிட்டிஷ் ராணுவம் நெப்போலியனை சிறைபிடித்து , ஆப்ரிக்க தனிச்சிறையில் அடைத்தது. நெப்போலியன் மிகவும் மன உளைச்சலில் காலம் கழித்தார். அவரைப்பார்க்க வந்த அவரின் நண்பர் ஒருவர் அவரிடம் ஒரு சதுரங்க அட்டையை கொடுத்து " இது உங்களின் சிந்தனையை செயல்பட வைக்கும் , தனிமையை போக்கும்" என்று கூறி அவரிடம் கொடுத்தார். 

    ஆனால் சிறை படுத்திவிட்டார்களே என்ற மன உளைச்சலில் இருந்த மாவீரனுக்கு சிந்தனை செயல்படாமல் அதன் மீது கவனம் போகவில்லை. சிறிது காலத்தில் இறந்தும் போனார்.

    பிற்காலத்தில் பிரான்ஸ் அருங்காட்சியகம் மாவீரன் நெப்போலியனிடம் இருந்த சதுரங்க அட்டையை ஏலம் ஆய்வு செய்த போது அந்த அட்டையின் நடு பக்கத்தில் சிறிய அளவில் ஒரு குறிப்பு இருந்தது. அதில் அந்த சிறைச்சாலையிலிருந்து தப்பிப்பதற்கான வழி அந்த குறிப்பில் இருந்தது. ஆனால் அவரின் மன உளைச்சலும் பதட்டமும் அவரின் சிந்தனையை செயல்படாமல் ஆக்கி வைத்தது. அவரின் தப்பிக்கும் வழியை மூட்டி மறைத்தது.

    அதைப்போல மரப்பெட்டியை தன் கூர்மையான பற்களாலும், நகத்தாலும் குடைந்து ஓட்டை போடும் எலி  அதே மரத்தால் செய்யப்பட்ட எலிப்பொறியில் சிக்கிக்கொண்டால் அதற்கு ஏற்படும் மன உளைச்சலாலும் , பதட்டத்தாலும் அந்த எலி பொறியை உடைக்கும் வழியை விட்டு விட்டு அந்த பொறியில் இருக்கும் கம்பியின் முன்னாலும் பின்னாலும் பதட்டத்துடன் சென்று சிந்தனை செய்யாமல் மனிதர்களிடம் மாட்டிகொள்கிறது. 

    மாவீரனும் சரி , சாதாரண எலியும் சரி பதட்டமும் , மன விளைச்சலும் அவர்களின் சிந்தனையை செயல்படாமல் வைத்து முனேற்றத்துக்கான வழியை அடைத்து விடுகிறது . 

    சிந்தித்து செயல்படுவோம் !!!!!!!!!!!!!! 



Post a Comment

0 Comments