புதிர் :1
கால் அரைக்கால் காசுக்கு நால் அரைக்கால் வாழைக்காய் எனில் காசுக்கு எத்தனை வாழைக்காய் ?
விடை
கால் அரைக்கால் காசுக்கு = நால் அரைக்கால்
காசுக்கு(1/4+1/8) = (4 + 1/8) வாழைக்காய்
காசுக்கு ( 3/8 ) = (33/8 ) வாழைக்காய்
காசுக்கு = (33/8 ) /(3/8) வாழைக்காய்
காசுக்கு = 11 வாழைக்காய்
----------------------------------------------- புதிர் :2
ஒரு தோட்டத்தில் எலுமிச்சை பழம் பறிக்க, ஒரு சிறுவன் செல்கிறான். அந்த தோட்டத்திற்கு 7 வாயில்கள் உள்ளது. ஒவ்வொரு வாயிலுக்கும் ஒரு வாயிற்காவலன் இருக்கிறான். சிறுவன் அந்த 7 காவலர்களிடம் "நான் பறிக்கும் பழங்களில் பாதியை உங்களுக்கு தருகிறேன் அதிலிருந்து ஒரு பழத்தை மட்டும் எனக்கு திரும்ப தரவேண்டும் " என்று கூறுகிறான். காவலாளிகள் அனைவரும் ஒத்துக்கொள்கிறார்கள் . சிறுவன் தான் பறித்த
அனைத்து பழங்களையும் அவனே கொண்டு சென்றான் . எனில் சிறுவன் எத்தனை பழங்களை பறித்தான்.
விடை : 2 பழங்கள்
--------------------------------------------
புதிர் :3
நாங்ககளும் நாங்களும் எங்களில் பாதியும் பாதியில் பாதியும் என்னையும் சேர்த்து 100 எனில் நாங்கள் எத்தனை பேர் ?
விடை
நாங்கள் என்றாலும் எங்கள் என்றாலும் இரண்டும் ஒன்றே
நாங்ககளும்+நாங்களும்+ எங்களில் பாதியும்+பாதியில் பாதியும் + என்னையும் சேர்த்து=100
x + x + x/2 + x/4 +1 = 100
x + x + x/2 + x/4 = 100-1
x + x + x/2 + x/4 = 99
[ 4x + 4x + 2x + x ] /4 = 99
[11x] /4 =99
11x = 99 * 4
x = 99 * 4
11
x= 36 பேர்
-------------------------------------
புதிர் :4
3 வாத்து 3 நாட்களில் 3 முட்டை போடும் எனில் 300 வாத்து 300 நாட்களில் எத்தனை முட்டை போடும் ?
விடை : 30000 முட்டை போடும்
விளக்கம்
ஒரு வாத்து மூன்று நாட்களுக்கு ஒரு முட்டை போடுகிறது.
ஒரு வாத்து முன்னூறு நாட்களில் நூறு நாட்கள் மட்டுமே முட்டை போடும் [300 / 3 = 100] ஒரு வாத்து 100 முட்டை போடும் எனில் முன்னூறு வாத்து 30000 [300*100=30000] முட்டை போடும்
-------------------------------------
புதிர் :5
கட்டியோ எட்டுக்கட்டி கால் அரை முக்கால் மாற்றி செட்டியார் சென்றுவிட்டார் சிறு பிள்ளைகள் மூன்று பேர் கட்டியை உடைக்காமல் கணக்கை தீர்க்கவும் .
விடை :
ஐந்து 1/4 கட்டிகள்
இரண்டு 1/2 கட்டிகள்
ஒரு 3/4 கட்டி
மொத்தம் 8 கட்டிகள் இருக்கின்றன.
சிறுபிள்ளைகள் மொத்தம் 3 பேர் உள்ளனர்.
1/4 + 1/4 + 1/4 + 1/4 = 1 ஒருவருக்கும்
1/2 + 1/2 = 1 ஒருவருக்கும்
1/4 + 3/4 = 1ஒருவருக்கும் தர வேண்டும்.
----------------------------
புதிர் :6
எட்டை எட்டுமுறை பயன்படுத்தி 1000 வர வழைக்க முடியுமா?
விடை :
8
8
8
8 8
8 8 8
-----------
1 0 0 0
________
-----------------------------------------------புதிர் :6
ஒரு கூடையில் பழங்கள் இருக்கின்றன. அந்த பழங்களை இரண்டு இரண்டாக பிரித்தால் ஒரு பழம் மீதியாகிறது. மூன்று மூன்றாக பிரித்தால் இரண்டு பழங்கள் மீதியாகின்றன. நான்கு
நான்காக பிரித்தால் மூன்று பழங்கள் மீதியாகின்றன. ஐந்து ஐந்து பழங்களாக பிரித்தால் நான்கு பழங்கள் மீதியாகின்றன.
ஆறு ஆறு பழங்களாக பிரித்தால் ஐந்து பழங்கள் (Fruits) மீதியாகின்றன. ஏழு ஏழு பழங்களாக பிரித்தால் மீதி இல்லை . எனில் கூடையில் எத்தனை பழங்கள் இருக்கின்றன.
விடை : 119 பழங்கள்
______________________
புதிர் :7
ஒரு சதுரத்தை தொடர்ந்து ஒவ்வொரு மூலையையும் மூன்று முறை சுற்றி வர வேண்டும். இந்த எண்ணிக்கை உடன் என்னையும் சேர்த்தால் 34 கிடைக்கும் எனில் நான் யார் ?
விடை:
சதுரத்திற்கு மூன்று முறை
4 பக்கங்கள் * சுற்ற வேண்டும் +X =34
4 *3+X=34
12+X=34
X=34-12
X=22
அந்த எண்= 22
.......................................................................................................