**************************************************** ***********************************
மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளால் ஆண்டுதோறும் (NMMS, TRUSTS, NTSE ) என திறனாய்வுத்தேர்வுகள் நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 1000 மற்றும் ரூ. 1250என அவர்தம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது .
[தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மேற்கண்ட தேர்வுகளை எழுத அனுமதி இல்லை ]
****************************************** *************************************
தேர்வின் பெயர் : தேசிய வருவாய்வழி திறனாய்வுத்தேர்வு (National Mean cum Merit Scholarship)-NMMS
*****************************************************************************************
Ø தேர்வு எழுத வேண்டிய வகுப்பு:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் / ஊராட்சி/ நகராட்சி / மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதலாம் .
Ø தேர்வு எழுதுவதற்கான தகுதிகள்:
- 7ஆம் வகுப்பில் 55% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் .
- தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் 50% பெற்றிருந்தால் போதும்.
- பெற்றோரின் ஆண்டு வருமானம் ரு1,50,000 க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
Ø தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை :
- அக்டோபர் மாதத்தில் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகும்.
- www.tndge.tn.nic.in என்ற இணையதளத்தில் online -ல் பள்ளி தலைமையாசிரியர் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் .
தேர்வுக்கட்டணம் ரூ. 50
Ø தேர்வு நடைமுறை:[ 90+90=180 வினாக்கள் ]
ஒரு மதிப்பெண் வினாக்கள் சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல் (objective type questions ) முறையில் கொடுக்கப்படும்.
1.மனத்திறன் தேர்வு (MAT) -MENTAL ABILITY TEST
90 வினாக்கள் - 90மதிப்பெண்கள் - 90 நிமிடங்கள்
இடைவேளை – 20 நிமிடங்கள்
2.பாடத்திறன் தேர்வு – (SAT) -SCHOLASTIC ABILITY TEST
90 வினாக்கள் - 90மதிப்பெண்கள் - 90 நிமிடங்கள்
Ø தேர்ச்சி முறை:
- பயிலும் மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் தேர்வு செய்யப்படும் மாணவர் எண்ணிக்கை மாறுபடும்.
- நாடு முழுவதும் MAT மற்றும் SAT தேர்வுகளில் குறந்தபட்சம் 40% பெற்ற மாணவர்கள் தர அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர் .
- (தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் 32% பெற்றால் போதும்).
- மாற்றுத்திறனாளிகளுக்கு 3% இட ஒதுக்கீடு உண்டு.
- ஒவ்வொரு மாநிலத்திலும் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேர்வு செய்யப்படும் 100000 மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 1000 வீதம் 4ஆண்டுகள் ( 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ) தொடர்ந்து அவர்தம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
******************************************************************************************
தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர் திறனாய்வுத்தேர்வு: (TAMILNADU RURAL STUDENTS TALENT SEARCH EXAM) TRUSTS
******************************************************************************************
Ø தேர்வு எழுத வேண்டிய வகுப்பு:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் / ஊராட்சி/ உள்ள கிராமப்புற பள்ளிகளில் பயிலும் ஒனபதாம் வகுப்பு மாணவர்கள்
Ø தேர்வு எழுதுவதற்கான தகுதிகள்:
- 8 ஆம் வகுப்பில் 55% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்கள்
- தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் 50% பெற்றிருந்தால் போதும்.
- பெற்றோரின் ஆண்டு வருமானம் ரு1,50,000 க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
Ø தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை :
- ஜூலை அல்லது செப்டமப்ர் மாதத்தில் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகும்.
- www.tndge.tn.nic.in என்ற இணையதளத்தில் online -ல் பள்ளி தலைமையாசிரியர் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் .
தேர்வுக்கட்டணம் ரூ. 10
Ø தேர்வு நடைமுறை:
- ஒரு மதிப்பெண் வினாக்கள் சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல் (objective type questions ) முறையில் கொடுக்கப்படும்.
- வினாத்தாள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும்.
மனத்திறன் தேர்வு (MAT) - MENTAL ABILITY TEST
- 90 வினாக்கள் - 90மதிப்பெண்கள் - 90 நிமிடங்கள்
- இடைவேளை – 20 நிமிடங்கள்
பாடத்திறன் தேர்வு – (SAT) -SCHOLASTIC ABILITY TEST
- 90 வினாக்கள் - 90மதிப்பெண்கள் - 90 நிமிடங்கள்
Ø தேர்ச்சி முறை:
- மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் தரநிலை அடிப்படையில் வருவாய் மாவட்ட அளவில் வரிசைபடுத்தப்படுவர்
- வருவாய் மாவட்டத்திற்கு 50 மாணவர்கள் மற்றும் 50 மாணவிகள் தேர்வு செய்யப்படுவர்.
- ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் ரூ. 1000 வழங்கப்படும்.
******************************************************************************************
தேசிய திறனாய்வுத் தேர்வு
( NATIONAL TALENT SEARCH EXAMINATIONS)-NTSE)
******************************************************************************************
Ø தேர்வு எழுத வேண்டிய வகுப்பு:
- அரசு மற்றும் அரசு உதவி பெறும் / ஊராட்சி/ நகராட்சி / மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள்
NTSE -STAGE 1 – அந்தந்த மாநில அரசால் நடத்தப்படும்
Ø தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை :
- ஜூலை அல்லது செப்டம்பர் மாதத்தில் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகும்.
- www.tndge.tn.nic.in என்ற இணையதளத்தில் online -ல் பள்ளி தலைமையாசிரியர் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் .
தேர்வுக்கட்டணம் ரூ. 50
Ø தேர்வு நடைமுறை:
- ஒரு மதிப்பெண் வினாக்கள் சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல் (objective type questions ) முறையில் கொடுக்கப்படும்.
- வினாத்தாள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும்.
- 90 வினாக்கள் - 90மதிப்பெண்கள் - 90 நிமிடங்கள்
- ஆங்கிலமொழித்திறன் தேர்வு-LANAGUAGE TEST – 50 மதிப்பெண்கள்
- பாடத்திறன் தேர்வு – (SAT) -SCHOLASTIC ABILITY TEST
- 90 வினாக்கள் - 90மதிப்பெண்கள் - 90 நிமிடங்கள்
Ø தேர்ச்சி முறை:
- ஒவ்வொரு மாநிலத்திற்கும் பயிலும் மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் தேர்வு செய்யப்படும் மாணவர் எண்ணிக்கை மாறுபடும்.
- ஆங்கில மொழித்திறன் தேர்வில் 50மதிப்பெண்களுக்கு 40% மதிப்பெண் பெற்றாலே தகுதியாக கருதப்படும். (இதில் தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் 32% பெற்றிருந்தால் போதும்.)
- மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் தரநிலை அடிப்படையில் மாநில அளவில் தேர்வு செய்யப்பட்டு இரண்டாம் நிலை தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.
NTSE - STAGE - 2
மத்திய அரசால் நாடு முழுவதும் நடத்தப்படும்
* தேர்வுக்கட்டணம்¸கிடையாது.
- முதல் நிலைத் தேர்வில் [ STAGE -1] தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மட்டுமே இரண்டாம் நிலை[STAGE-2] தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.
- ஒரு மதிப்பெண் வினாக்கள் சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல் (objective type questions ) முறையில் கொடுக்கப்படும்.
- வினாத்தாள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும்.
மனத்திறன் தேர்வு (MAT) -MENTAL ABILITY TEST
- 50 வினாக்கள் - 50மதிப்பெண்கள் - 45 நிமிடங்கள்
- ஆங்கில மொழித்திறன் தேர்வு-LANAGUAGE TEST
பாடத்திறன் தேர்வு – (SAT) -SCHOLASTIC ABILITY TEST
- 50 வினாக்கள் - 50மதிப்பெண்கள் - 45 நிமிடங்கள்
- 100 வினாக்கள் - 100 மதிப்பெண்கள் - 90 நிமிடங்கள்
- தவறான விடைகளுக்கு 1/3பங்கு மதிப்பெண் ( Negative Marks) குறைக்கப்படும்.
Ø தேர்ச்சி முறை:
- MAT மற்றும் SAT தேர்வுகளில் குறந்தபட்சம் 40% பெற்ற மாணவர்கள் தர அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர் . (தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் மாற்று மாற்றுதிறனாளிகள் 32% பெற்றால் போதும்).
- ஆங்கில மொழித்திறன் தேர்வில் பெறும் மதிப்பெண் கருத்தில் கொள்ளப்படாது.
- மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் தரநிலை அடிப்படையில் தேர்வு செய்யபடுவர்.
தேர்வு செய்யப்படும் மாணவர்களில்
- 15% தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும்,
- 7.5% பழங்குடியின் பிரிவினருக்கும்,
- 3% மாற்றுதிறனாளிகளுக்கும் சலுகை உண்டு.
- 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 1250 வீதமும்,
- இளங்கலை UG மற்றும் முதுகலை PG –பயிலும்போது மாதந்தோறும் ரூ. 2000வீதமும் ,
- முனைவர் படிப்புகளுக்கு பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரை படியும் தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
******************************************************************************************
திறனாய்வுத்தேர்வுகளில் வெற்றி பெற குறிப்புகள் :
மேற்கண்ட அனைத்து திறனறித்தேர்வுகளிலும் உள்ள படிப்பறிவுத்திறன் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற மாணவர்கள் முந்தைய வகுப்புகளின் பாடப்பகுதிகள் மற்றும் அந்த ஆண்டிற்கான பாடப்பகுதிகளில் தெளிவான ஆழ்ந்த அறிவு பெற்றிருத்தல் அவசியம் ஆகும்.
படிப்பறிவுத்திறன் (SAT) தேர்வில்
- அறிவியல்
- கணிதம்
- சமுக அறிவியல்ஆகிய பாடங்களிலிருந்து வினாக்கள் கேட்கப்படும்.
மனத்திறன் தேர்வில் ( MAT ) அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற மாணவர்கள் பின்வரும் திறன்களை சோதிக்கும் வகையில் வினாக்கள் அமைந்திருக்கும்.
- பகுத்தாயும் திறன்
- காரணம் அறியும் திறன்
- சிந்திக்கும் திறன்
- முப்பரிமாண வெளியில் கட்சிப்படுத்தி கண்டறியும் திறன்
- முன்னறிவைத் தொடர்பு படுத்தும் திறன்
*****************************************************************************************
மேற்கண்ட தேர்வை எழுதும் மாணவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
0 Comments